Posts

இழப்பின் பிடியில்

Image
  இழப்பின் பிடியில் மனிதனுடைய வாழ்வு என்பது இழப்பை நோக்கி பயணிக்கிறது. இழப்பின் பிடியில் உன்னை கடந்து செல்லும் பொது தான் மறந்த நினைவுகள் மனதில் மலர்கிறது பயந்து பள்ளிக்கு வந்த என் முதல் நாளில், பயத்தை போக்கிய நண்பனின் எதுவும் எதிர்பாராத நட்பை இழந்துவிட்டேன் செய்த தவறுகளை சுட்டிக் காட்டி நல்ல செயல்களுக்கு தட்டி கொடுக்கும்  அன்பு வழிகாட்டியை இழந்துவிட்டேன். குயிலும் காக்கையும் போரிடும் போர்க்களத்தடியில்  நடத்திய பாடத்தில் மயங்கிய என்னை மீட்ட மணியோசையை இழந்துவிட்டேன்   மதிய வெயிலில், மரத்தடி நிழலில் ஐந்து கை சோற்றை ஆறு கைகளுக்கு பிரித்து கொடுத்த மனதை இழந்துவிட்டேன்   சில்லறை காசுகள் சட்டைப் பைகளில்   துள்ளாத நாளில் ,   “நாளைக்கி வந்து காசு கொடு”  என்று சொல்லி கையில்  உப்பு மாங்காய் கொடுத்த பாட்டியின்  நம்பிக்கையை இழந்துவிட்டேன்   எத்தனையோ இழப்புகளுக்கு பின் நீ இல்லாத  நாட்களில்  என்னையே இழந்துவிட்டேன். --நன்றி-- இப்படிக்கு இழப்பின் பிடியில்  கவியின் காதலன் (குறிப்பு: என் எழுத்துகளில்...

பட்டாம்பூச்சி காதலன்

Image
  பட்டாம்பூச்சி காதலன் கதையின் சுருக்கம். வண்ண போர்வையில் கண்ணை கட்டியது போல், பட்டாம்பூச்சிகள் பறந்து திரியும் அழகு கொண்ட வண்ணத்தித் தோட்டத்தில் கலந்த ஒரு காவியம். வண்ணத்தின் வசியத்தால் சுரந்த காதல்ரசம், காமரசமாக மாறிய கவிஞனின் கதை. காதல் காத்திருப்பு நடத்திய நாடகத்தின் முடிவோ நாயகியை பலிகொடுத்த ஒரு இருளின் கதை . கதையின் தொடக்கம். குயில்கள் கூவி, மயில்கள் ஆடி மரங்கள் அனுப்பிய கடிதமான தென்றல் தழுவும் தருணத்தில் , செடிகள் சிலிர்த்து வளர்த்த மலர்கள், வெளியிட்ட மதுவின் வாடை வானம் எட்டியது. தேவதைகள் தான் வளர்த்த குழந்தைகளை பூமிக்கு அனுப்பி மலர்களின் மதுவை சூறையாடும் படி ஆணையிட்டனர். வண்ண மலர்களுக்கு போட்டியாய் கண்ணை கவரும் வண்ண சிறகுகளுடன் பூக்களோடு போரிடும் வண்ணத்துப்பூச்சிகளின் அழகை வாயால் வரையறுக்க முடியுமோ!. அழகுக்கு உருவம் கொடுத்தால் அது வண்ணத்தித்  தோட்டம் தான் என உலகமே கூறும்.  கவிஞனின் தொடக்கம். அன்று ஒரு நாள் அழகை ரசிக்கும் கவிஞனின் காலடிகள் காட்டில் பட்டது. வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் அழகை காகிதங்களில் எழுதி வானம் எட்ட கோட்டை கட்டினான். காதலின் தொடக்கம...