இழப்பின் பிடியில்
இழப்பின் பிடியில்
இழப்பின் பிடியில்
உன்னை கடந்து செல்லும்
பொது தான்
மறந்த நினைவுகள் மனதில் மலர்கிறது
பயந்து பள்ளிக்கு
வந்த என் முதல் நாளில்,
பயத்தை போக்கிய
நண்பனின்
எதுவும் எதிர்பாராத
நட்பை இழந்துவிட்டேன்
செய்த தவறுகளை சுட்டிக் காட்டி
நல்ல செயல்களுக்கு தட்டி கொடுக்கும்
அன்பு வழிகாட்டியை இழந்துவிட்டேன்.
குயிலும் காக்கையும் போரிடும்
போர்க்களத்தடியில் நடத்திய பாடத்தில்
மயங்கிய என்னை மீட்ட
மணியோசையை இழந்துவிட்டேன்
மதிய வெயிலில்,
மரத்தடி நிழலில்
ஐந்து கை சோற்றை
ஆறு கைகளுக்கு
பிரித்து கொடுத்த
மனதை இழந்துவிட்டேன்
சில்லறை காசுகள் சட்டைப்
பைகளில் துள்ளாத நாளில் ,
“நாளைக்கி வந்து காசு கொடு”
என்று சொல்லி கையில் உப்பு மாங்காய்
கொடுத்த பாட்டியின் நம்பிக்கையை
இழந்துவிட்டேன்
எத்தனையோ இழப்புகளுக்கு பின்
நீ இல்லாத நாட்களில்
என்னையே
இழந்துவிட்டேன்.
--நன்றி--
இப்படிக்கு இழப்பின் பிடியில்
கவியின் காதலன்
(குறிப்பு: என் எழுத்துகளில் மாற்றம் கொண்டு வர விரும்பினால் kaviyinkadhalan@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் Instagram, Facebook, Twitter போன்ற இணைய தளத்திலும் தொடர்பு கொள்ளுங்கள்.)
| Instagram | Twitter | Facebook |
@urssanjayraja

Comments
Post a Comment